கணவனின் வீட்டில் உள்ளவர்களுடன் புதிதாக சென்ற நாம் எப்படி பழகுவது

 


கணவனின் வீட்டில் உள்ளவர்களுடன் புதிதாக சென்ற நாம் எப்படி பழகுவது அல்லது அவர்களை புரிந்துக் கொள்வது எப்படி???எனக்கு தெரியாத புதிராய் இருக்கின்றது!!!


🌹பதில்🌹


இது புதிதாக திருமணம் செய்த எல்லா பெண்களும் சந்திக்கும் ஒரு விஷயமாகும்.


இஸ்லாம் கணவருக்கு கட்டுப்படுதலை மிக மிக முக்கியமாக கூறியிருக்கிறது,அவர்களது வீட்டாருக்கு கட்டுப்படுதல் பற்றி பெரிதாக கூறவில்லை எனினும்,நாம் கணவர் வீட்டாருக்குள்ள பொறுப்புகளை பற்றி விசாரிக்கப்படுவோம்.

அதனடிப்படையில் நாம் அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதல்நாள் வகுப்பு எவ்வளவு கடினமோ,அப்படித்தான் நாம் புதிய வீட்டிற்கு செல்வதும்,அவர்களை புரிந்து கொள்வதும்.


புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு உங்களை பிடிக்கும் வகையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருந்தால்,


அவர்கள் அனைவரையும் எளிதில் அன்பால் வெல்ல முடியும்.  


எப்படி புதிதாக ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களை


ஏற்பது சற்று கடினமோ, அப்படி தான், நீங்கள் செல்லும் வீட்டில் இருப்பவர்களும் உங்களை ஏற்க சற்று நாட்கள் ஆகும்.


ஆகவே அவர்களுக்கு உங்களை விரைவில் பிடிக்கும் செய்ய எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.


கணவருக்கு நாம் அன்பான மனைவியாக மாறுவதற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் வீட்டாரிடம் நாம் அன்பாக இருப்பது மட்டுமே,


முதலில் அவர்கள் வீட்டினரது பழக்கவழக்கங்கள், உணவுமுறை,இதைபற்றி கணவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களின் பழக்கவழக்கங்கள் மார்க்கத்திற்கு முரணான இல்லையெனில், நாமும் அவர்களின் பழக்கத்திற்கு ஏற்றார்போல் இருப்பது நல்லது.

ஆனால் மார்க்கவரம்புகளுக்கு மீறி இருந்தால் நிச்சயமாக நாம் அதை மென்மையான முறையில் அதை சுட்டிக்காட்டுதல் வேண்டும்.


கணவருக்கு சகோதரிகள் இருந்தால் தோழிகளாக மாற்றிவிடுங்கள்,இது பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்.


கணவருக்கு சகோதரர்கள் இருந்தால் போதிய இடைவெளியில் அன்புடனுடன்,சிறிது கண்டிப்புடனும் நடந்து கொள்ளுங்கள்.


கணவரது வீட்டாரை பற்றி கணவரிடம் குறை கூறாதீர்கள்.,அப்போதுதான் அவர்கள் நம்மை ஏதேனும் குறை சொன்னாலும்,அவர் சிந்தித்து முடிவெடுக்கக்கூடும்.


அவர்கள் செய்யும் சிறு சிறு  விஷயங்களில் எல்லாம் தலையிடாமல் இருப்பது பல பிரச்சினைகள் வராமல் காக்கும்.,நம்மிடம் அவ்வாறு அவர்கள் நடந்தால் முடிந்த அளவு கணவரிடம் கூறாது நாமே சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

ஏதேனும் பெரிய பிரச்சினைகள் உருவாக நேரிட்டால் அதை கணவரிடம் அவர்கள் முன்பே வைத்து நேரிடையாக அப்பொழுதே தெளிவாக்கி விடவேண்டும்.


கணவர் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் நாம்தான் குற்றம்சாட்டப்படுவோம்.,

இது போன்ற சமயங்களில் பொறுமையாக, நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.


இதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல்,சாதாரணமாக அணுகினாலே போதுமானது.,குழப்பம் ஏற்படும்போது தொழுகையை கொண்டும்,

பொறுமையை கொண்டும் அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள்.


பொறுமையினாலும்,நற்பண்புகளாலும் இம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாவோம்.,இன்ஷா அல்லாஹ்


📖📚ஆதாரங்கள்


தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) அபூதாவூத் 1442


📗5200. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்““  நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 136

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்


📗

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  ﴿3:200﴾

3:200. முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!


Comments